News August 11, 2024
திமுகவுக்கு தேசியக் கொடியை பிடிக்கவில்லை: அண்ணாமலை

பாஜகவின் பைக் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அண்ணாமலை ஆவேசமாகப் பேசினார். இதுகுறித்து பேசிய அவர், “சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் கூறியிருக்கிறார். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தேசியக் கொடியுடன் பைக் பேரணி நடத்த திட்டமிட்டோம். ஆனால், தேசியக் கொடியை பிடிக்காததால் இப்பேரணிக்கு திமுக அரசு அனுமதி அளிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
Similar News
News August 13, 2025
இனி வாட்ஸ்ஆப் மட்டும் இருந்தா போதும் மக்களே…

தமிழ்நாடு அரசின் 50 சேவைகள் விரைவில் வாட்ஸ்ஆப் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு, இருப்பிட சான்று, வருவாய் சான்றிதழ், அரசு பேருந்து டிக்கெட் உள்ளிட்ட சேவைகள் வாட்ஸ்ஆப்பில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே TN DIPR என்ற வாட்ஸ்ஆப் சேனல் மூலம் அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. உங்கள் என்ன சேவை வாட்ஸ்ஆப்பில் வேண்டும்?
News August 13, 2025
டிரம்ப்பை சந்திக்கும் PM மோடி

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐநா பொது சபை கூட்டத்தில் PM மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா உடனான வர்த்தக பிரச்னைகளுக்கு மத்தியில் PM அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களுடன் பிரதமர் உயர்மட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
News August 13, 2025
ஆக.16 லீவ்! ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் கிடையாது

வாரந்தோறும் சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால், வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. இதனால், அன்றைய தினம் தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் சனிக்கிழமை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறாது என்று அரசு தரப்பில் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.