News October 24, 2025
”திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவு..”

தன்னை அவமரியாதையாக நடத்தினாலோ, கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை தர மறுத்தாலோ திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுப்பேன் என தவாக வேல்முருகன் கூறியுள்ளார். 2021 தேர்தல் முடிந்ததில் இருந்தே திமுகவுக்கும், வேல்முருகனுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், இவர் வைக்கும் கோரிக்கைகளை திமுக ஏற்குமா, கூட்டணியில் தவாக நீடிக்குமா என மீண்டும் சலசலப்பு கிளம்பியுள்ளது.
Similar News
News October 24, 2025
BREAKING: விஜய்யுடன் கூட்டணி இல்லை.. திடீர் பல்டி

2026 தேர்தலில் தவெக கூட்டணியில் அமமுக இடம்பெறும் என தகவல் வெளியானது. அதனை உறுதிசெய்யும் வகையில், விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என டிடிவி தினகரனும் கூறியிருந்தார். ஆனால், தற்போது விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என்றேனே தவிர, விஜய்யுடன் கூட்டணிக்கு செல்வோம் என சொல்லவில்லை என்று விளக்கமளித்துள்ளார். விஜய்யை கூட்டணிக்கு வாங்க வாங்க என EPS கூவி கூவி அழைப்பதாகவும் டிடிவி தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
ALERT: மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புங்க

வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என IMD அறிவித்துள்ளது. அப்பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், வரும் 28-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 24, 2025
Zero Haters திரைப்படங்கள்

ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்களும் இருப்பார்கள், விமர்சகர்களும் இருப்பார்கள். ஆனால் சில திரைப்படங்கள், கதையின் எளிமை, உணர்வின் ஆழம், இசை, நடிகர்களின் இயல்பான நடிப்பு போன்றவற்றால் அனைவராலும் கொண்டாடப்படுகின்றன. Zero Haters திரைப்படங்கள் சிலவற்றை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.


