News March 18, 2024

தூத்துக்குடியில் திமுக மீண்டும் போட்டி

image

2024 மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக போட்டியிடவுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் மீண்டும் திமுகவே களமிறங்கவுள்ளது. இந்த முறையும் தூத்துக்குடியில் கனிமொழியே போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 26, 2025

சூரசம்ஹாரம் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பக்தர்கள் அதற்கு ஏற்றார் போல் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அன்று தனிநபர் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

News October 25, 2025

தூத்துக்குடி: போஸ்ட் ஆபீஸ் வங்கி வேலை அறிவிப்பு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும் நிலையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

News October 25, 2025

JUST IN தூத்துக்குடிக்கு முதல்வர் வருகை

image

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இம்மாதம் 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருகை தருகிறார். கோவில்பட்டிக்கு வருகை தரும் முதல்வர் அங்கு கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகம், அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலை ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் செய்து வருகிறார்.

error: Content is protected !!