News March 18, 2024
தென்காசி தொகுதியில் திமுக போட்டி

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தென்காசி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் தனுஷ் குமார் வெற்றி பெற்ற எம்பியானார்.மீண்டும் தனுஷ் குமார் தென்காசி வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது திமுக வேறு யாருக்காவது வாய்ப்பளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Similar News
News September 9, 2025
கீழப்பாவூர் அருகே தீ விபத்து – 2 லட்சம் சேதம்

நாகல்குளம் ஆசாரி தெருவைச் சேர்ந்த நாகராஜன்(35), கீழப்பாவூர் அருகே முத்து பர்னிச்சர் ஒர்க் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது கடையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்க, ஆலங்குளம் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில், சுமார் 2 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இருப்பினும் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தப்பியது.
News September 9, 2025
BREAKING தென்காசிக்கு வருகை தரும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி நவ.11 அன்று தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
News September 9, 2025
தென்காசி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பதிவு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதளத்தில் இருந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்து பகிரப்பட்டுள்ளது. “சாலையில் நடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்ற எச்சரிக்கை மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செய்தியை புகைப்படத்துடன் அனைவரும் புரிந்து கொள்ளும்படி பகிர்ந்துள்ளது. *ஷேர்