News March 18, 2024

ஈரோட்டில் திமுக போட்டி

image

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, ஈரோடு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமுர்த்தி வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள ஈரோடு மக்களவை தேர்தலில் திமுகவே நேரடியாக களமிறங்கவுள்ளது. இந்த முறை ஈரோடு தொகுதியில் பிரகாஷ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 2, 2025

ஈரோடு: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

ஈரோடு, அந்தியூர் அருகே கொள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. இவர் தேர்வு சரியாக எழுதவில்லை என, மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 2, 2025

நலவாரிய ஓய்வூதியர் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வழிவுறுத்தல்

image

ஈரோடு மாவட்டத்தில் நலவாரியங்களில்பதிவு பெற்ற 60வயது நிறைவடைந்த, 11,000 மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்காக ஆண்டு ஆயுள் சான்றை ஏப்30-ஆம் தேதிக்குள் https://tnuwwb.tn.gov.inஎன்ற இணையதள முகவரிமூலம், உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

News April 2, 2025

ஈரோட்டில் வேலை வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (BANKING TRAINEE)உள்ள காலி பணியிடங்கைள நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000- ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!