News March 18, 2024
திருவண்ணமலையில் மீண்டும் திமுக போட்டி

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, திருவண்ணமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை(திருவண்ணமலை), விஷ்னு பிரசாத்(ஆரணி) ஆகியோர் வெற்றி பெற்று எம்பியாகினர். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 24, 2026
தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 24, 2026
தி.மலைக்கு வந்தது அலெர்ட்!

தி.மலை மாவட்டத்தில் இன்று (ஜன.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தி.மலைக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களுக்கான விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.
News January 24, 2026
தி.மலை: செல்போன் டவரில் பேட்டரி திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ந.மோட்டூர் கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் இருந்து பேட்டரிகளை திருடிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் 15க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செல்போன் டவர்களில் இருந்து 25 முதல் 100க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து மேலும் விசாரிக்கின்றனர்.


