News October 16, 2025
திமுக + காங்., கூட்டணி: டெல்லி மேலிடம் எடுத்த முடிவு

ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் அடம்பிடித்து வரும் நிலையில், 4 அமைச்சர் பதவி நிபந்தனையுடன் கூட்டணி அமைக்க காங்., டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஹார் தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்தி, தமிழகத்தில் நேரடியாக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளாராம். அவரது தலைமையில் வரும் ஜனவரியில், 3 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News October 16, 2025
செங்கோட்டையன் தூங்கிவிட்டார்: அண்ணாமலை

EPS உடன் முரண்பாட்டில் உள்ளதாக கூறப்படும் செங்கோட்டையனும், அண்ணாமலையும் ஒரே விமானத்தில் பயணித்தது பேசுபொருளானது. இந்நிலையில், விமானத்தில் ஏறியதும் செங்கோட்டையன் தூங்கிவிட்டதாகவும் தான் புத்தகம் படித்துக்கொண்டே வந்ததாகவும் கூறிய அவர் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், கடந்த முறை விமானத்தில் செல்கையில் CM-ஐ சந்தித்தபோது, மரியாதை நிமித்தமாக பேசியதாகவும் கூறியுள்ளார்.
News October 16, 2025
கோலி, ரோஹித் ஓய்வு எப்போது? ரவி சாஸ்திரி

டெஸ்ட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது போல, அவர்களே (ரோஹித், கோலி) ODI குறித்தும் முடிவு செய்வார்கள் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ரோஹித் சர்மா, விராட் இருவரும் ஆஸி.,க்கு எதிரான ODI தொடரோடு ஓய்வை அறிவிப்பர் என தகவல் வெளியாகும் நிலையில், ரவி சாஸ்திரி பேசியது பேசுபொருளாகியுள்ளது. இருவருக்கும் ODI-க்கு போதுமான உடற்தகுதி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரோஹித் – கோலி ஆட்டத்தை பார்க்க ரெடியா?
News October 16, 2025
BREAKING: பிரபல தமிழ் நடிகர்கள் வீடுகளில் பதற்றம்

நடிகர்கள் கார்த்திக், சத்யராஜ், நாசர், அமீர் ஆகியோரின் வீடுகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். டிஜிபி அலுவலகத்திற்கு வந்த இமெயிலை தொடர்ந்து, அனைவரின் வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாள்களாகவே, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.