News August 20, 2024

உதயநிதிக்காக பாஜகவுடன் திமுக நெருக்கம்: உதயகுமார்

image

கலைஞர் நினைவு நாணயத்தில் இந்தி உள்ளது என இபிஎஸ் கூறியது தேச துரோக குற்றமா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். விழா அழைப்பிதழில் மாநில அரசு நிகழ்ச்சி என கூறிவிட்டு, மத்திய அரசு நிகழ்ச்சியை நடத்துகிறது என முதல்வர் மாற்றிக் கூறியதாக விமர்சித்த அவர், உதயநிதியை துணை முதல்வராக்க எந்த நெருக்கடியும் ஏற்பட கூடாது என்பதற்காக திமுக, பாஜகவை நெருங்குவதாகவும் சாடினார்.

Similar News

News March 19, 2026

Summer Tips: சூட்டைத் தணிக்க இத ட்ரை பண்ணுங்க…!

image

<<19427290>>கோடைக்காலம்<<>> தொடங்கிவிட்டாலே, சூட்டைத் தணிக்க தர்பூசணி, இளநீர் கடைகளை நோக்கித்தான் மக்கள் படையெடுப்பார்கள். இவற்றை விடவும் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுவது பாதாம் பிசின்தான். இரவு ஊறவைத்த பாதாம் பிசினை, காலையில் பால், மோர் உள்ளிட்ட பானங்களில் கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்குமாம். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும், ஜீரணக் கோளாறை சரிசெய்யவும் இது ரொம்பவே உதவியாக இருக்குமாம்.

News March 19, 2026

தொகுதிப் பங்கீடு இழுபறி.. கமல் எடுத்த முடிவு

image

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, கமல் தலைமையில் நாளை மநீம மா.செ., & செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. <<19424797>>திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில்<<>> இழுபறி நீடிக்கும் நிலையில், இக்கூட்டத்தில் உதயசூரியனில் போட்டியிடுவதா (அ) டார்ச் லைட்டில் போட்டியிடுவதா என்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்புள்ளது. முன்னதாக, திமுக கூட்டணியில் மநீமவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியானது.

News March 19, 2026

வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. அரசு அறிவிப்பு

image

தமிழகத்தில் ஒரு பக்கம் மழை பெய்தாலும், இன்னொரு பக்கம் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதையொட்டி, சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டாயத் தேவை இருந்தால், பருத்தி ஆடைகள் அணிந்து குடையுடன் வெளியே செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT

error: Content is protected !!