News September 4, 2025
திமுகவை அசைக்க முடியாது: அமித்ஷாவுக்கு வைகோ பதிலடி

திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று சமீபத்தில் அமித்ஷா கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய வைகோ, இமயமலையை கூட அமித்ஷா அசைத்துவிடலாம், ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என பதிலடி கொடுத்துள்ளார். எண்ணற்ற பேர் தன் உயிர்களையும், ரத்தத்தையும் சிந்தியுள்ள திமுகவை இவ்வாறு கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.
Similar News
News September 4, 2025
GST எதிரொலி: உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை

தீபாவளி பரிசாக மத்திய அரசு GST வரம்பில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 610 புள்ளிகள் உயர்ந்து 81,100 புள்ளிகளிலும், Nifty 24,900 புள்ளிகளை கடந்தும் வர்த்தகமாகின்றன. Bajaj Finance, Maruti Suzuki, HDFC வங்கிகளின் பங்குகளும் உயர்ந்துள்ளன. அதேநேரம், Reliance, TATA Steel, JSW Steel பங்குகள் சற்று சரிவை சந்தித்துள்ளன.
News September 4, 2025
சற்றுமுன்: TTV தினகரனுக்கு முதல் ஆளாக ஆதரவு

பாஜக கூட்டணியில் இருந்து TTV தினகரன் வெளியேறியதற்கு, திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் முதல் ஆளாக வரவேற்றுள்ளார். பாஜகவின் நட்பை முறித்துக் கொண்ட தினகரனின் முடிவு சிறப்பானது. இதனால், அவரின் அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனக் கூறிய அவர், இனி பாஜக கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 4, 2025
RECIPE: ரத்த அழுத்தத்தை குறைக்கும் ‘சோள தோசை’

*இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை சீராக்கவும் வெள்ளை சோள தோசை உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
*வெள்ளை சோளம், உளுந்து & இட்லி அரிசி ஒன்றாக 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
*இதனை மிக்ஸியில் தோசை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
*தேவையான அளவு உப்பு சேர்த்து, 6-8 மணி நேரம் புளிக்க வையுங்கள். இதில், தோசை செய்தால், வெள்ளை சோள தோசை ரெடி. SHARE IT.