News March 19, 2024
நாளை திமுக வேட்பாளர்கள் பட்டியல்

திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகவுள்ளது. மக்களவைத் தேர்தலில், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையிலுள்ள அக்கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வெளியிடவுள்ளார்.
Similar News
News August 13, 2025
வழக்கம்போல வரவேற்பும், புறக்கணிப்பும்: விசிக

வழக்கம்போல் கவர்னர் RN ரவி சுதந்திர தின தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தால், வழக்கம்போல இந்நிகழ்வில் விசிக பங்கேற்காது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக காங்கிரஸ், CPI, CPI(M), மதிமுக, மமக ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. இதுவரை திமுக தரப்பில் இவ்விருந்தில் கலந்துகொள்வது குறித்து ஏதும் கூறவில்லை.
News August 13, 2025
தோனிக்கு பதில் யார்? பட்டியலில் 5 வீரர்கள்

2026 IPL சீசனில் தோனி விளையாடுவாரா (அ) பாதியில் ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி கிரிக்கெட் அரங்கில் ஒலித்துக் கொண்டே உள்ளது. ஒருவேளை தோனி விளையாடவில்லை என்றால் CSK-வின் அடுத்த வி.கீ., பேட்ஸ்மேனாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற பட்டியலும் தயாராகி வருகிறதாம். இதில் சஞ்சு சாம்சன் (RR), உர்வில் படேல் (CSK), ரஹ்மானுல்லா குர்பாஸ் (KKR), இஷான் கிஷன் (SRH) , நாராயண் ஜெகதீசன் (KKR) ஆகியோர் உள்ளனர்.
News August 13, 2025
ரஜினி ஒரு அபூர்வ ராகம்! குவியும் வாழ்த்துக்கள்

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிக்கு அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தனது வாழ்த்தை தெரிவித்த வைரமுத்து, ரஜினி ஒரு அபூர்வ ராகம் என தெரிவித்துள்ளார். அதேபோல் DCM உதயநிதி ஸ்டாலின், டிடிவி தினகரன், செல்வப்பெருந்தகை, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் ரஜினிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.