News March 20, 2024
திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது (2)

*நீலகிரி – ஆ.ராசா, *தூத்துக்குடி – கனிமொழி, *திருவண்ணாமலை – அண்ணாதுரை, *ஆரணி – தரணிவேந்தன், *தருமபுரி – ஆ.மணி, *சேலம் – செல்வகணபதி, *தஞ்சாவூர்- ச.முரசொலி, *தென்காசி – ராணி, *கோவை – கணபதி ராஜ்குமார், *பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி, *ஈரோடு – பிரகாஷ், *கள்ளக்குறிச்சி – மலையரசன் உள்ளிட்டோர் திமுக சார்பில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.
Similar News
News September 9, 2025
செங்கோட்டையன் புதிய முடிவு.. அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

டெல்லியில் FM நிர்மலா சீதாராமனை, கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஒருங்கிணைந்த அதிமுகவாக 2026 தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்று பிற்பகலில் தமிழகம் திரும்பும் செங்கோட்டையன், TTV தினகரனை நேரில் சந்தித்து பேச உள்ளார். முன்னதாக OPS-ம் செங்கோட்டையனை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
News September 9, 2025
மீண்டும் மறுப்பு.. நீதிமன்றத்தை நாடும் தவெக?

தனது பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து துவங்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். இதற்காக போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், பிரசார இடத்தை மாற்ற வேண்டும், பேசும் நேரத்தை குறைக்க வேண்டும், மாற்று சாலைகளில் ரோடு ஷோ செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதாம். இந்நிலையில், இது அரசியல் உள்நோக்கோடு கூறப்படுவதாக கருதும் தவெக, நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 9, 2025
தோனியின் ஒன் லைன் மந்திரம் இதுதான்

சர்வதேச போட்டிகளில் இருந்து எப்போதோ ஓய்வு பெற்றாலும், தோனியின் விளையாட்டு நுட்பங்கள் இன்றுவரை பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், CSK வீரர் நூர் அகமது தோனி பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். ‘சூழ்நிலையை அறிந்துகொண்டு, அதற்கு தேவையானதைச் செய்’ என்றே தோனி அறிவுறுத்துவார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், IPL-ல் ஆட்ட நாயகன் விருது வென்றதை விட MSD-ன் கீழ் விளையாடியதே சிறந்தது என்றார்.