News July 10, 2024
வாக்களித்தார் திமுக வேட்பாளர்

விக்கிரவாண்டியில் 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 42ஆவது வாக்குச்சாவடியில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் அறிவுறுத்தலின் படி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்றப்படுமா?

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று இரவு 10:30-க்குள் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் 2-வது முறையாக போலீசார் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி அளிக்கவில்லை. அரசு தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். மலைக்கு செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பதற்றம் நீடிக்கிறது.
News December 4, 2025
குழப்பத்துக்கு காரணம் DMK கைக்கூலிகள்: அன்புமணி

பாமகவில் இப்போது எந்த குழப்பமும் இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார். திமுகவின் கைக்கூலிகள் பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும், அது முற்றிலுமாக முறியடிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இன்னும் ஒருசில வாரங்களில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமையும் என்றும் அதில் பாஜக இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News December 4, 2025
டெங்கு அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

டெங்கு காய்ச்சல் என்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன. இவற்றை தெரிந்துகொள்வதால் நாம் எச்சரிக்கையாக இருக்க முடியும். அறிகுறிகள்: திடீரென அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை, மிகுந்த சோர்வு ஆகியவை. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். சாதாரண காய்ச்சல் என்று இருந்துவிட வேண்டாம். SHARE பண்ணுங்க.


