News April 16, 2024
திமுக வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்

அரக்கோணம் தொகுதியில் பொதுமக்களுக்கு பணப் பட்டுவாடா தடையின்றி நடைபெறுவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தோல்வி பயம் காரணமாக பணத்தை வெள்ளமாக வாரி இறைக்கிறார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ள அவர், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
Similar News
News March 18, 2026
நீலகிரியில் நாளை விடுமுறை: முக்கிய தகவல்!

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு நாளை (மார்ச் 19) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வகையான தனியார் பள்ளிகளும் நாளை சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்த கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி தாளாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், வகுப்புகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News March 18, 2026
BREAKING: கூட்டணி.. கடைசி நேரத்தில் மாற்றம்

ராமதாஸ் தலைமையில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய MLA அருள், கூட்டணி குறித்து தொடர்ந்து விவாதித்து வருவதாகவும், விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி காலம்தான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் இறுதி நேரத்தில் கூட்டணி கணக்குகள் மாறலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 18, 2026
தேமுதிகவுக்கு 7 சீட் ஒதுக்கீடு?

வரும் 23-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பிரேமலதா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசார உத்திகள் & தேமுதிகவின் தேர்தல் அறிக்கை குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரிரு நாள்களில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.


