News March 22, 2025
திமுக – பாஜக உறவு: சீமான் என்ன சொல்கிறார் தெரியுமா?

பாஜகவுடன் கள்ள உறவு இல்லை; நல்ல உறவே திமுகவுக்கு உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ₹150 கோடி ஊழலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை குறிப்பிட்ட அவர், ஆனால் ₹1000 கோடிக்கு ஊழல் நடந்தும் பாஜக நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பதில் திமுக மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.
Similar News
News March 23, 2025
சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சு…!

சென்னை, மும்பை அணிகள் மோதுவதையொட்டி சேப்பாக்கம் மைதானம் முழுவதும் மஞ்சள் ஜெர்சிகளால் நிரப்பியுள்ளது. ரசிகர்கள் இப்போதே ஆரவாரத்தை தொடங்கிவிட்டனர். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான எம்ஐ அணியும் சற்றுநேரத்தில் ஐபிஎல் யுத்தத்தை தொடங்க உள்ளன. இந்நிலையில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. 18வது சீசனை சிஎஸ்கே வெற்றியுடன் தொடங்குமா?
News March 23, 2025
‘எல் கிளாசிக்கோ’ எப்படி வந்தது தெரியுமா?

ஸ்பெயின் மொழியில் எல் கிளாசிக்கோ என்பதற்கு ஆங்கிலத்தில் The Classic என்பது பொருள். இந்த வார்த்தை அங்குள்ள கால்பந்து கிளப் அணிகளான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் மோதும்போது பயன்படுத்தப்படுகிறது. இப்படி சிறந்த அணிகள் மோதும் நிகழ்வை, அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் எல் கிளாசிக்கோ எனக் குறிப்பிட்டு வருகின்றனர். இதுதான் IPL-ல் CSK vs MI போட்டியை ரசிகர்கள் அப்படி அழைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
News March 23, 2025
ஆபாச பாடல்களுக்குத் தடை… பீஹார் அரசு அதிரடி!

பீஹாரின் போஜ்புரி பாடல்களில் வழக்கமாகவே ஆபாசம் சற்று அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பிஹார் அரசு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பொதுவெளியில் ஆபாசமான போஜ்புரி பாடல்களை பயன்படுத்தக் கூடாது என அம்மாநில காவல்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டுக்கும் வேணும்னு நினைக்கிறீங்களா?