News October 9, 2025
திமுக கூட்டணி.. உதயநிதியின் புதிய முடிவு

யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுக இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டை தொட முடியாது என உதயநிதி சவால் விடுத்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக, தவெக, பாஜக நெருங்கி வருவதாக பேசப்படுகிறது. நாமக்கல்லில் பேசிய EPS, திமுகவுடையது வெற்று கூட்டணி எனவும், அதிமுகவின் கூட்டணி பலமான வெற்றி கூட்டணி எனவும் பேசியிருந்தார். குறிப்பாக விஜய் கட்சி கொடியை சுட்டிக் காட்டி பேசியது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.
Similar News
News October 9, 2025
ஜான்சன் & ஜான்சனுக்கு ₹8,574 கோடி அபராதம்

US-ன் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ₹8,574 கோடி அபராதமாக விதித்துள்ளது. புற்றுநோயால் இறந்த மே மூர் என்பவரின் குடும்பத்தினர் பேபி பவுடரில் புற்றுநோயை உண்டாகும் பொருள் இருந்ததாக கூறி இந்த வழக்கை தொடர்ந்திருந்தனர். இதேபோல் எண்ணற்ற வழக்குகள் ஜான்சன் & ஜான்சன் மீது நிலுவையில் உள்ள நிலையில், 2023-ல் அதன் விற்பனை நிறுத்தப்பட்டது.
News October 9, 2025
தாக்கப்பட்ட பாஜக MP கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

மேற்குவங்கத்தில் <<17928599>>பாஜக MP ககென் முர்மு<<>> தாக்கப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இவருக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை வழங்கப்பட்டது. இதற்கு காரணம் திரிணாமுல் காங்., என அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதனை மம்தா மறுத்த நிலையில், வாக்குமூலம் கொடுத்துள்ளார் MP ககென். தன்னை தாக்கியவர்கள், TMC கட்சியை சேர்ந்தவர்கள் எனவும், மம்தாவின் ஆதரவாளர்கள் எனவும் சொல்லிக்கொண்டே தாக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
News October 9, 2025
வர்த்தகம் தொடர்பாக மோடியை சந்திக்கும் பிரிட்டன் PM

2 நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் பிரிட்டன் PM கீர் ஸ்டார்மரை, மும்பையில் PM மோடி சந்தித்து பேச உள்ளார். சமீபத்தில் பிரிட்டன் சென்றிருந்த PM மோடி, அந்நாட்டுடன் தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தார். அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருவரும் இணைந்து Global Fintech Fest என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்றனர்.