News April 19, 2024
கோவையில் ₹1,000 கோடியை வாரி இறைத்த திமுக, அதிமுக

கோவையில் ₹1,000 கோடிக்கும் மேல் திமுக, அதிமுக வாரி இறைத்திருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கோவை தொகுதியில் திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்திருப்பதாகவும், ஆனால் பாஜக யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும் கூறினார். பாஜக பணம் அளித்ததை நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயாரென்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
Similar News
News November 11, 2025
நடிகர் ஸ்ரீகாந்திடம் ED தீவிர விசாரணை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகர் <<18225496>>ஸ்ரீகாந்த்<<>> ஆஜரானார். போதைப்பொருள் வழக்கில் அக்.28ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அன்றைய தினம் ஆஜராகவில்லை. இன்று ஆஜராகியுள்ள இவரிடம், போதைப் பொருள் வாங்கியது குறித்தும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.
News November 11, 2025
Bomb Blast: உமரின் தாய் மற்றும் சகோதரர் கைது

டெல்லி குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட டாக்டர் உமரின் தாய் மற்றும் சகோதரர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளனர். உமருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வோர் யார் யார் என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளுடன் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உமருடன் நெருக்கமாக இருந்தவர்களையும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 11, 2025
இந்த நகரங்களில் உள்ளவர்களுக்கு கம்மி சம்பளம்

செய்யுறது ஒரே வேலை. ஆனால் சம்பளம் மட்டும் ஒருத்தருக்கு அதிகம் ஒருத்தருக்கு குறைவு என்ற ஆதங்கம் உங்களுக்கு இருக்கலாம். அதுதொடர்பாக Levels.fyi ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் Software Engineer-களுக்கு எந்தெந்த நகரங்களில் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. உங்களுடைய சம்பளம் போதுமானதா இருக்கா?


