News March 27, 2024
சிறுபான்மையினரை புறக்கணிக்கும் திமுக, அதிமுக?

சிறுபான்மையின மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாவலர்கள் என்று கூறும் திமுக மற்றும் அதிமுக ஒரு இஸ்லாமியரை கூட வேட்பாளராக அறிவிக்கவில்லை. இது, தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. சமூக நீதி பேசும் இரு கட்சிகளும், சமூக ரீதியிலான வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டு கவுண்டர், நாயுடு, முக்குலத்தோர், தேவேந்திரர், வன்னியர் போன்ற பெரும்பான்மை சமூகத்தினரை வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளன.
Similar News
News March 11, 2026
ஒரே இடம்.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் மோடி!

நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில், <<19339925>>பாஜகவை CM ஸ்டாலின் கடுமையாக விமர்சனம்<<>> செய்திருந்தார். அதற்கு அதே திருச்சியில் இன்று மாலை PM மோடி பதிலடி கொடுக்க உள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். பஞ்சப்பூரில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனவும் பாஜக தரப்பு தெரிவித்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் மேடை ஏற உள்ளனர்.
News March 11, 2026
மக்கள் பீதியடைய வேண்டாம்: ஷோபா கரண்ட்லஜே

போரினால் நம் நாட்டில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே கூறியுள்ளார். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80-90% மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்துள்ளது; இந்நிலையில் கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ஹோட்டல்களை பாதிக்கும் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 11, 2026
நாடு முழுவதும் லாக்டவுன் பதற்றம்.. அடுத்த ஷாக்!

2020 மார்ச் மாதத்தை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 25.3.2020 – 14.4.2020 வரை முதற்கட்ட லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. தற்போது சிலிண்டர் பிரச்னை மறைமுகமாக லாக்டவுனை நோக்கி நகர்த்தி வருவதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதனால், சிலிண்டர் வாங்க பலரும் குவிகின்றனர். ஆனால், பிரச்னை விரைவில் தீரும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


