News March 20, 2024
திமுக – அதிமுக: 8 தொகுதிகளில் நேருக்கு நேர்

அதிமுக முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி அதிமுக – திமுக 8 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதேபோல், அதிமுக – காங்கிரஸ் 2 தொகுதியிலும், (கிருஷ்ணகிரி, கரூர்), அதிமுக – விசிக 2 தொகுதியிலும் (சிதம்பரம், விழுப்புரம்) நேரடியாக மோதுகின்றன. அதிமுக மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தபின் இந்த எண்ணிக்கை மாறலாம்.
Similar News
News October 14, 2025
புரூஸ் லீ பொன்மொழிகள்

*வெற்றியடைவது எப்படி என்பதை அறிய எல்லோரும் விரும்புகிறார்கள், ஆனால் தோல்வியை ஏற்றுக்கொள்வது எப்படி என்பதை அறிய யாரும் விரும்புவதில்லை. *வாழ்க்கையே உங்கள் ஆசிரியர், நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறீர்கள். *மகிழ்ச்சியாக இருங்கள், ஆனால் திருப்தி அடையாதீர்கள். *நீங்கள் நினைப்பது போல், நீங்கள் ஆகிறீர்கள். *தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படக்கூடியவை, அவற்றை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தால்.
News October 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 488 ▶குறள்: செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. ▶பொருள்: பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.
News October 14, 2025
IND Vs PAK: ஹாக்கியிலும் தொடருமா பஞ்சாயத்து?

மலேசியாவில் இன்று நடைபெற உள்ள Sultan of Johor Cup ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில் இந்திய வீரர்கள் கைக்கொடுக்க மறுத்தால், அதை சீரிஸாக எடுத்துக் கொள்ளாமல், களத்தில் கவனமாக இருக்கும்படி, பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு தங்களது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த கைகுலுக்கல் பஞ்சாயத்து தொடங்கியது.