News April 14, 2025
திமுக ஏஜென்டுகள்.. விளாசிய நயினார் நாகேந்திரன்

அதிமுக-பாஜக கூட்டணியை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பொருந்தாக் கூட்டணி என்று விமர்சிக்கின்றன. இதற்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக, பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என திமுக ஏஜென்டுகள் விமர்சிப்பதாகவும், ஆனால் உண்மையில் இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான் என்றும் கூறியுள்ளார். திமுக அரசை ஆட்சியை விட்டு அகற்றப் போகும் கூட்டணியும் இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 16, 2026
டி20 WC-ல் வாஷிங்டன் சுந்தர் ஆடுவாரா?

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் <<18832341>>வாஷிங்டன் சுந்தர்<<>> விலகியுள்ளார். முதல் ODI-ல் பீல்டிங் செய்த போது இடுப்பு பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், காயம் குணமடைவதற்கு சில வாரங்கள் ஆகும் என்பதால் பிப்.ல் தொடங்கும் டி20 WC தொடரின், குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் சுந்தர் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. இதனால் மாற்று வீரர் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது. யாரை தேர்வு செய்யலாம்?
News January 16, 2026
சற்றுமுன்: கூட்டணி.. விஜய்க்கு அதிர்ச்சி

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என அறிவித்த தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் இதுவரை முன்வரவில்லை. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தவெக முனைப்பு காட்டினாலும், அக்கட்சி திமுக கூட்டணியிலேயே தொடரும் எனத் தெரிகிறது. AMMK, DMDK உடனான கூட்டணிப் பேச்சும் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவில்லை. இதனால் ஏமாற்றத்தில் உள்ள தவெக தலைமை, தை பிறந்ததால் வழி பிறக்கும் என நம்புகிறதாம்.
News January 15, 2026
உங்கள் மனம் கவர்ந்த பொங்கல் ரிலீஸ் எது?

பொங்கல் திருநாள் என்றாலே கரும்பு, சர்க்கரை பொங்கல், புத்தாடையுடன் புதுப்படங்களும் தமிழர்களின் வாழ்வில் இணைந்துவிடும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் ஜன நாயகன் ரிலீஸாகவில்லை. எனினும் சிவகார்த்திகேயனின் பராசக்தி, கார்த்தியின் வா வாத்தியாரே, ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் ஆகியவை பொங்கல் ரீலிசாக வெளிவந்துள்ளன. இவற்றில் எந்த படத்தை பார்த்தீர்கள்? எது உங்களின் மனம் கவர்ந்தது? கமெண்ட் பண்ணுங்க..


