News March 18, 2024
நீலகிரி (தனி) தொகுதியில் மீண்டும் திமுக

2024 மக்களவை தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக ஆ.ராசா போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.
Similar News
News April 2, 2025
கூடலூர் தேனீக்கள் கொட்டி சுற்றுலா பயணி பலி

கூடலூர் அருகே தவளை மலை காட்சி முனை பகுதியில் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று(ஏப்.02) கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை பகுதியை சார்ந்த ஜாபர் என்ற சுற்றுலா பயணி அங்கு சென்ற போது அங்கிருந்த தேனீக்கள் அவரை கொட்டியதில் அவர் பரிதமாக உயிரிழந்தார். அவரது உடல் தற்போது கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
News April 2, 2025
அங்கன்வாடி பணிக்கு ரெடியா?

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <
News April 2, 2025
இ-பாஸ் நடைமுறை: கலெக்டர் முக்கிய தகவல்!

“நீலகிரி கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில், பூம் பேரியர் அமைக்க உள்ளோம். இ-பாஸ் பெற்ற வாகனங்களின் நம்பர் பிளேட் வாயிலாக தானியங்கி முறையில், செக் செய்யும் வகையில் இது அமைய உள்ளது. அடுத்த வாரம் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிகம் தேவைப்படமாட்டார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. மற்ற சோதனைச்சாவடிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.” என கலெக்டர் தெரிவித்துள்ளார்.