News March 18, 2024
கள்ளக்குறிச்சி தொகுதியில் மீண்டும் திமுக

2024 மக்களவை தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக கௌதம் சிகாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.
Similar News
News January 21, 2026
கள்ளக்குறிச்சி: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News January 21, 2026
கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் அட்டைகளை இணையதளம் வாயிலாக உடனுக்குடன்
பெறலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் வருகிற 23.01.2026 முதல் 31.01.2026 வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
கள்ளக்குறிச்சியில் கொலை வெறித் தாக்குதல்!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கும் இடையே நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்த நிலையில், ஏழுமலை மற்றும் அவர்களது உறவினர்கள் சேர்ந்து பழனிவேலின் கரும்புப் பயிரை சேதப்படுத்தி, தட்டி கேட்ட பழனிவேலுவையும் சராமாரியாக தாக்கினர். இதுகுறித்து 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


