News May 16, 2024

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக நடவடிக்கை?

image

நடிகை ராதிகா குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக உரிய நடவடிக்கையை எடுக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த நிலையில், தற்போது ராதிகாவை விமர்சித்துள்ளார். இந்த முறை அவரை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News September 18, 2025

Ex CM வங்கி கணக்கை ஹேக் செய்து ₹3 லட்சம் திருட்டு

image

கர்நாடகா Ex CM சதானந்த கவுடாவிடம் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. அவரது 3 வங்கி கணக்கை ஹேக் செய்த மர்ம கும்பல், அதில் இருந்து ₹3 லட்சத்தை திருடியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீஸில் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே சில நாட்கள் முன் கர்நாடக பிரபல நடிகரும் இயக்குநருமான <<17721322>>உபேந்திரா <<>>மற்றும் அவரது மனைவியின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 18, 2025

மூலிகை: மருத்துவ குணம் நிறைந்த இலுப்பைப்பூ!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரைப்படி,
*இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டால், இரும்புச்சத்து கிடைக்கும்.
*இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல், நீர்ச்சத்து குறைபாடு போன்றவை நீங்கும்.
*இலுப்பைப்பூவைக் காயவைத்து இடித்து வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான மாதவிலக்குக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நீங்கும். இதனை நண்பர்களுக்கும் பகிரவும்.

News September 18, 2025

அதிமுகவில் இணைந்தனர்

image

2026 தேர்தலையொட்டி, ஒவ்வொரு கட்சியும், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தி.மலையில், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், திமுக முன்னாள் சேர்மன் காசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். திமுகவின் மூத்த அமைச்சரான எ.வ.வேலுவின் கோட்டையாக தி.மலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!