News March 4, 2025
EPS பேச்சால் DMDK அதிருப்தி.. கூட்டணியில் விரிசல்?

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோதே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு என உடன்படிக்கை கையெழுத்தானதாக கூறியிருந்தார். அதனை இபிஎஸ் மறுத்துள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் சொல்வது உண்மை?
Similar News
News January 9, 2026
விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் !

‘ஜனநாயகன்’ படம் ரீலிஸ் தள்ளிப்போன சோகத்தில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு ஆறுதலாக ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதாவது விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ படங்கள் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது. விஜய் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது. நீங்க எந்த படத்துக்கு போக போறீங்க?
News January 9, 2026
இணைய சேவை ஈரானில் முடக்கம்

பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த ஈரான் மக்கள், தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஈரானில் இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அரசு எதிரான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசு மீது மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
News January 9, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 575
▶குறள்:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
▶பொருள்: கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.


