News May 7, 2025
தேமுதிக மாநாடு.. தேதி குறித்த பிரேமலதா!

தேமுதிக முக்கிய பொறுப்புகளில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ள பிரேமலதா, கடலூரில் ஜன.9-ல் கட்சியின் மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார். கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும்போதே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மாநாட்டின் மூலம் கட்சியின் பலத்தை நிரூபித்த பிறகே, கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி கூடுதல் சீட்களை பெற பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 17, 2025
ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறிய வரும்போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
News September 17, 2025
‘மதராஸி’ படத்தின் OTT ரிலீஸ் எப்போது?

‘மதராஸி’ படம் வரும் அக்., 3-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 5-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதனால் தான், முதல் 2 நாள்களில் ₹50 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 நாள்களை கடந்தும் வசூல் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என கூறப்படுகிறது.
News September 17, 2025
19 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.