News August 28, 2024
லெஜண்ட்ஸ் லீக் தொடரில் இணைந்த DK

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி Ex வீரர் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு நடத்தப்படும் LLC தொடரின் 3வது சீசன், செப்.11-அக்.5 வரை இந்தியா, கத்தாரில் நடக்கிறது. இதில் இணைந்துள்ள அவர், SOUTHERN SUPER STARS அணி கேப்டனாகியுள்ளார். அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும், DK கடந்த ஜூனில் ஓய்வு அறிவித்தார். கேப்டனாக DK கலக்குவாரா?
Similar News
News August 17, 2025
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
* சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
* கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
News August 17, 2025
அந்த கூலியும் காலி, இந்த கூலியும் காலி: சீமான்

துப்புரவுப் பணிகளை கூட தனியாரிடம் ஒப்படைத்தால், மாநகராட்சி எதற்கு என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 6 அறிவிப்புகளை வெளியிட்ட CM ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி சென்றது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த நிகழ்வின் இயக்குநர் மேயர் பிரியா என்றும், அதனை அவர் சரியாக இயக்கவில்லை என்றார். ரஜினியின் கூலியும் காலி, மேயர் பிரியா இயக்கிய இந்த கூலியும் காலி என விமர்சித்தார்.
News August 17, 2025
SK-ன் அப்பாவாக 90’ஸ் டாப் ஹீரோ?

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘மதராஸி’. அதைத்தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் ‘பராசக்தி’
படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் 90-களின் சாக்லேட் பாய் ஹீரோவான அப்பாஸ், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்து வருகிறாராம். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.