News July 8, 2025
விராட்டுக்கு நன்றி சொன்ன ஜோகோவிச்

இங்கி.,ல் உள்ள விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைக் கண்ட போட்டோஸ் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த போட்டோவைப் பகிர்ந்து ஸ்டார் டென்னிஸ் பிளேயர் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளார். இது கோலியின் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அதேநேரம், அங்கு டெஸ்ட் தொடர் நடைபெற்று வருவதால், அதனைக் காண விராட் செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News September 14, 2025
நாற்காலிகளில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருக்கும் துளைகள் வெறும் டிசைன் கிடையாது. நாற்காலிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் போது அதற்கிடையில் காற்று புகும். அப்படி அடைபடும் காற்று, வெளியேறாவிட்டால் சேரை பிரித்தெடுப்பது சிரமமாக இருக்கும். இதனாலேயே இந்த துளைகள் போடப்பட்டிருக்கிறது. மேலும், துளைகளை போடுவதால் பிளாஸ்டிக்கின் தேவை குறைந்து, அது உற்பத்தி செலவை குறைக்கிறதாம். SHARE.
News September 14, 2025
அனைத்து பள்ளிகளிலும் நாளை தொடங்குகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. 6 – 8-ம் வகுப்புகளுக்கு செப்.15 – 25-ம் தேதி வரையிலும், 9 & 10ம் வகுப்பு செப்.15-26-ம் தேதி வரையிலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 25-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. செப்.26 முதல் அக்.5-ம் தேதி வரை 9 நாள்கள் காலாண்டு விடுமுறையாகும். தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு Way2News சார்பில் வாழ்த்துக்கள்!
News September 14, 2025
RECIPE: ஹெல்தியான ராகி லட்டு!

ராகி லட்டு கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்தை அளிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
➤1 தேக்கரண்டி நெய்யில், 1 கப் கேழ்வரகு மாவை வறுக்கவும்.
➤இதில் ஏலக்காய் பொடி, வேர்க்கடலையை சேர்த்து கலக்கவும்.
➤அதேபோல, வெல்லத்தை அரை கப் தண்ணீர் விட்டு, காய்ச்சி கொள்ளவும்.
➤காய்ச்சிய வெல்லப்பாகை மாவில் கலந்து உருண்டைகளாக பிடித்து எடுத்தால், சுவையான சத்தான ராகி லட்டு ரெடி. SHARE.