News August 4, 2024
புதிய சாதனை படைத்த ஜோகோவிச்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் முதல்முறையாக தங்கப்பதக்கத்தை வென்றார். 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச், 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வயதான (37) டென்னிஸ் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
Similar News
News January 16, 2026
தாம்பரம்: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக வரும் ஜன.18-ந்தேதி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்படும் ரயில் ராஜபாளையம் வழியாக மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. மற்றவர்களுக்கு பயன்படும்.
News January 16, 2026
பொங்கல் பரிசு: தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $25(இந்திய மதிப்பில் ₹2,260) குறைந்து $4,600-க்கு விற்பனையாகிறது. கடந்த 30 நாள்களில் சுமார் $300 அதிகரித்த தங்கம் இன்று சரிவைக் கண்டுள்ளது. தை பிறந்துள்ளதால், சுப முகூர்த்த விழாவுக்காக நகைகள் வாங்க காத்திருந்தவர்களுக்கு இது சற்று நிம்மதியை அளித்துள்ளது. இந்திய சந்தையில் இன்று கணிசமான அளவு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.
News January 16, 2026
ELECTION: ராமதாஸ் முன் உள்ள 3 வாய்ப்புகள் இதுதான்!

NDA கூட்டணியில் அன்புமணி சேர்ந்துவிட்டதால், ராமதாஸுக்கு இன்னும் 3 வாய்ப்புகளே உள்ளன. 1.திமுக அல்லது தவெக கூட்டணியில் சேர்ந்து அன்புமணி தரப்புக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்குவது. 2. தனித்து களம் காண்பது. 3.அன்புமணியை சமாதானப்படுத்தி அதிமுக அணியில் ஒற்றை இலக்க தொகுதிகளை பெறுவது. வரும் தேர்தலில் எந்த அணி அதிக MLA-க்களை வெல்லுமோ, அந்த அணியே பாமகவை கைப்பற்றும் என கூறப்படுகிறது.


