News October 23, 2024
தீபாவளி: ₹499க்கு தமிழக அரசு கொடுக்கும் பொருட்கள் லிஸ்ட்

தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களுக்கு ₹499க்கு 15 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை அரசு நேற்று அறிமுகம் செய்தது. *மஞ்சள் தூள் – 50g, * கடுகு – உளுத்தம்பருப்பு – 125g, சீரகம் 100g, வெந்தயம் 100g, சோம்பு 50g, மிளகாய் 250g, தனியா 500g, புளி 500g, உளுத்தம் பருப்பு 500g, கடலை பருப்பு 200g, பாசிப்பருப்பு 200g, வறுகடலை 200g, பெருங்காயத்தூள் 15g ஆகியவை அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் விற்கப்படுகிறது.
Similar News
News October 14, 2025
BREAKING: அமைச்சர் சிவசங்கர் விடுவிப்பு

மணல் குவாரி மோதல் வழக்கில் இருந்து அமைச்சர் சிவசங்கர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆவினன்குடியில் சிவசங்கர் தலைமையில் 2015-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். மேலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக சிவசங்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் சிவசங்கர் உள்ளிட்ட 27 பேரை விடுவித்து கடலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News October 14, 2025
பெண்களுக்கு எதிராக திராவிட மாடல்: வானதி

திராவிட மாடல் ஆட்சி என்பது முழுவதும் பெண்களுக்கு எதிரான மாடலாக உள்ளது என்று வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். குடும்பத்தில் கூட ஆண் வாரிசுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெண்களுக்கு கொடுக்காததுதான், திராவிட மாடல் அரசாக பார்க்கிறோம். பெண்ணுரிமை பேசுகின்றன ஆட்சியில்தான் அதிகமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதாக திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
News October 14, 2025
நவம்பரில் IAS, IPS அதிகாரிகள் மாநாடு

CM ஸ்டாலின் தலைமையில் IAS, IPS அதிகாரிகளின் மாநாடு வரும் நவ.5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்து CM விரிவான ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மாநாடுகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.