News October 23, 2024
தீபாவளி: ₹499க்கு தமிழக அரசு கொடுக்கும் பொருட்கள் லிஸ்ட்

தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களுக்கு ₹499க்கு 15 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை அரசு நேற்று அறிமுகம் செய்தது. *மஞ்சள் தூள் – 50g, * கடுகு – உளுத்தம்பருப்பு – 125g, சீரகம் 100g, வெந்தயம் 100g, சோம்பு 50g, மிளகாய் 250g, தனியா 500g, புளி 500g, உளுத்தம் பருப்பு 500g, கடலை பருப்பு 200g, பாசிப்பருப்பு 200g, வறுகடலை 200g, பெருங்காயத்தூள் 15g ஆகியவை அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் விற்கப்படுகிறது.
Similar News
News December 20, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று(டிச.20) மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹12,400-க்கும், சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹99,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News December 20, 2025
விஜய் அப்டேட் ஆகணும்: அன்பில் மகேஸ்

தமிழகத்தில் மாணவர்கள் Dropout அதிகரித்துள்ளதாக விஜய் கூறியது வருத்தமளிப்பதாக அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். Dropout சதவிகிதம் அதிகமாக இருந்ததே 2017-18-ம் ஆண்டில், செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தான் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். அதற்கான தரவுகளை வழங்கியுள்ளதாக கூறிய அமைச்சர், பழைய செய்திகளை வைத்து பேசும் விஜய் கொஞ்சம் அப்டேட் ஆக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
News December 20, 2025
மகளிர் உரிமைத்தொகை: QR Code மூலம் தீர்வு காண முடிவு

மகளிர் உரிமைத்தொகை தொடர்பான குறைகளை தீர்க்க QR Code வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 1.40 கோடி பேருக்கு ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட சுமார் 12 லட்சம் பேரில் தகுதியானோர் மேல்முறையீடு செய்ய அரசு <


