News October 19, 2025

தீபாவளி ஸ்பெஷல்: எந்த இனிப்பு எவ்வளவு கலோரி!

image

தீபாவளிக்கு இனிப்புகளை விரும்பி சாப்பிடுவது வழக்கம். அப்படி நாம் சாப்பிடும் இனிப்புகளின் கலோரி எவ்வளவு தெரியுமா? *மைசூர் பாக் 1 துண்டு 200 கலோரி * அதிரசம் 1 துண்டு 150 கலோரி *குலாப் ஜாமுன் 2 துண்டுகள் 350 கலோரி *ரசகுல்லா 2 துண்டுகள் 300 கலோரி *பூந்தி லட்டு 2 துண்டுகள் 410 கலோரி *எள்ளுருண்டை 1 துண்டு 200 கலோரி. ஒருநாள் என்றாலும் அளவோடு சாப்பிட்டு தீபாவளியை கொண்டாடுங்கள் என்பதே நிபுணர்கள் அட்வைஸ்.

Similar News

News March 5, 2026

பாரதியார் பொன்மொழிகள்

image

*ஏதும் அறியாமலிருப்பது அறியாமை இல்லை. கண்டதெற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு, காலத்தையும், வாழ்வையும் வீணாக்குவது தான் அறியாமை *எவனையும் வெற்றுக் காகிதம் என ஒருபோதும் எண்ணாதே. ஒருநாள் அவன் பட்டமாய் பறப்பான். நீயும் அவனை அண்ணாந்துதான் பார்க்க வேண்டும் *இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்து கொள்ளவேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை *கல்வியும் தவமும் எந்த பிராயத்திலும் தொடங்கலாம்.

News March 5, 2026

கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

image

போரில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை மஷாத் நகரில் உள்ள ரேசா புனித தளத்தில் நடைபெறும் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், டெஹ்ரான் உள்ளிட்ட ஈரானின் முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சடங்கின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஈரான் அரசு கூறியுள்ளது.

News March 5, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 628 ▶குறள்:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
▶பொருள்: இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

error: Content is protected !!