News October 12, 2025

தீபாவளி ஆஃபர்.. விலை மளமளவென குறைந்தது

image

தீபாவளிக்கு ஹூண்டாய், டாடா நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி GST குறைப்பு மட்டுமின்றி தனியாக Tiago, Nexon, Punch கார்களுக்கு ₹30,000 தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல், ஹூண்டாயின் Aura ₹78,465 GST குறைப்பு + ₹43,000, Exter ₹51,158 GST குறைப்பு + ₹45,000, i20 காருக்கு ₹98,053 GST குறைப்பு + ₹55,000 சலுகை அறிவித்துள்ளதால் கார் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News October 12, 2025

மோசமாக அடிக்காதே.. லாரா – ஜெய்ஸ்வால் க்யூட்

image

‘எங்களுடைய பவுலர்களை மோசமாக அடிக்காதே’ என்று புன்னகையுடன் ஜெய்ஸ்வாலிடம் WI கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா கோரிக்கை வைத்தார். அதற்கு, ‘முயற்சி செய்கிறேன் சார்’ என ஜெய்ஸ்வால் புன்னகையுடன் பதிலளித்தார். முன்னாள், இந்நாள் லெஜன்ட்ஸ் பேசிய இந்த க்யூட் மொமண்ட் தற்போது வைரலாகிறது. இந்த டெஸ்ட் போட்டியை ஜாம்பவான்களான பிரைன் லாரா, VV ரிச்சர்ட் பார்த்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

News October 12, 2025

BREAKING: தீபாவளி விடுமுறை.. அமைச்சர் முக்கிய அறிவிப்பு

image

தீபாவளி விடுமுறையையொட்டி ஆம்னி பஸ் டிக்கெட் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் <<17984664>>கடும் நடவடிக்கை<<>> எடுக்கப்படும் என எச்சரித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பல ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்து இதுகுறித்து பேசவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News October 12, 2025

ஆப்கான் தாக்குதலில் 58 பாக்., வீரர்கள் பலி

image

காபுலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் எல்லையோர முகாம்களை நோக்கி ஆப்கானிஸ்தான் சரமாரி தாக்குதலை மேற்கொண்டது. இதில் 25 பாகிஸ்தான் ராணுவ முகாம்களை கைப்பற்றியதாக கூறும் ஆப்கன், 58 பாக். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் 9 ஆப்கான் வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!