News October 15, 2025

தீபாவளி ஆஃபர்.. ₹17,000 வரை விலை குறைந்தது

image

Triumph நிறுவனம் ஸ்பீடு 400, ஸ்பீடு T4 பைக்குகளுக்கு ₹16,797 வரை தீபாவளி Offer அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்பீடு 400 ஷோரூம் விலை சுமார் ₹2,33,754 எனவும், ஸ்பீடு T4 ₹1,95,539 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 350 CC-க்கு மேற்பட்ட பைக்குகளுக்கு GST 40% ஆக உயர்த்தப்பட்ட போதிலும் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக <<17985075>>ஹூண்டாய், டாடா<<>> நிறுவனங்கள் தங்களின் கார்களின் விலையை குறைத்திருந்தன.

Similar News

News October 15, 2025

Foxconn முதலீடு சர்ச்சை: என்னதான் நடக்கிறது?

image

Foxconn நிறுவனம் TN-ல் ₹15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக CM தெரிவித்திருந்தார். ஆனால், இதை புதிய முதலீடாக பார்க்கவில்லை என்று Foxconn கூறியது. இதனால் அரசு பொய் சொல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் விளக்கமளித்த அமைச்சர் TRB ராஜா, இந்த திட்டத்திற்கான பேச்சுவார்த்தை ஒரு வருடமாக நடந்து வருவதால், Foxconn இதை புதிய முதலீடாக கருதவில்லை என்றும், இது உறுதியான முதலீடு எனவும் தெரிவித்தார்.

News October 15, 2025

தீபாவளிக்கு ருசிக்க வேண்டிய பலகாரங்கள்..

image

தீபாவளி பண்டிகைக்கு, நம் வீட்டில் தாய்மார்கள் கண்டிப்பாக முறுக்கு, சீடை, குலாப் ஜாமுன், மிக்சர் போன்ற பலகாரங்கள் செய்வார்கள். நூற்றுக்கணக்கான பாரம்பரிய பலகாரங்கள் உள்ள நிலையில், ஏன் ஒரு சிலவற்றை மட்டுமே மீண்டும் மீண்டும் ருசிக்க வேண்டும். ஆகையால் இந்த தீபாவளிக்கு, மேற்கண்ட பலகாரங்களை செய்து கொடுக்குமாறு அம்மாவிடம் கேளுங்க..

News October 15, 2025

கவர்னருக்கு எதிராக SCல் தமிழக அரசு மனு

image

தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக சட்டதிருத்த மசோதாவை ஒப்புதலுக்காக தமிழக அரசு கவர்னருக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், மசோதா மீது முடிவெடுக்காமல் அதனை ஜனாதிபதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பியிருந்தார். இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது.

error: Content is protected !!