News October 11, 2025
தீபாவளி விடுமுறை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அக்.21, 22-ல் நெல்லையில் காலை 4 மணிக்கு புறப்படும் ரயில்(06156) பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு ரயில்(06155) புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு நெல்லை சென்றடையும். மேலும், <
Similar News
News October 11, 2025
மே.வங்கத்தில் மீண்டும் பெண் டாக்டருக்கு வன்கொடுமை

மேற்குவங்கம், துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தாவில் ஏற்கெனவே மருத்துவ மாணவி படுகொலை, சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் நடைபெற்ற இந்த சம்பவம் மேற்குவங்கத்தில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
News October 11, 2025
50,000 பேரை வீட்டிற்கு அனுப்பும் IT நிறுவனங்கள்

TCS நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கடந்த ஜூலையில் அறிவித்து ஊழியர்களை அதிர வைத்தது.. தற்போது பெரிய மற்றும் நடுத்தர IT நிறுவனங்கள், ஊழியர்களை ரிசைன் பண்ண சொல்லியும், உடனே வேறு வேலையை பார்க்க சொல்லியும் கமுக்கமாக வற்புறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 2025-26 நிதியாண்டில் 50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது உறுதி என கூறப்படுகிறது.
News October 11, 2025
அம்பேத்கர் பெயர் இல்லாதது பற்றி அமைச்சர் விளக்கம்

சாதி பெயர்கள் நீக்கம் குறித்த அரசாணையில் மாற்று பெயர்களாக பெரியார், கருணாநிதி பெயர்கள் இருந்த நிலையில், அம்பேத்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெறாதது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில், அரசாணையில் இடம்பெற்றது பரிந்துரை பெயர்கள் மட்டுமே, பிற தலைவர்களின் பெயர்களையும் வைக்கப்படலாம் என தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். 21 நாள்களில் ஊர்களில் உள்ள சாதி பெயர்கள் நீக்கப்படும் என்றார்.