News October 20, 2025
தீபாவளி விடுமுறை.. மேலும் 3 நாள்களுக்கு HAPPY NEWS

தீபாவளி விடுமுறைக்கு ஊர்களுக்கு சென்றவர்கள் சிரமமின்றி பணியிடங்களுக்கு திரும்ப ஏதுவாக நாளை முதல் 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் இருந்து அக்.21 முதல் 23 வரை 15,129 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் ஊர்களுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 31, 2026
AI டேட்டா சென்டர்கள்… வெப்பம் உயரும் அபாயம்

AI டேட்டா சென்டர்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளை வெப்பத் தீவுகளாக மாற்றுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பம் 10 கி.மீ வரை பரவுவதாகவும், இதனால் 34 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் AI டேட்டா சென்டர்கள் வேகமாக அமைக்கப்படும் நிலையில், இந்த ‘வெப்பத் தீவு’ பிரச்சனை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
News March 31, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை (ஏப்.1) தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். அதேநேரம், முழு ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
News March 31, 2026
100 கோடி GB-ஐ தாண்டிய மொபைல் டேட்டா பயன்பாடு

இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2025-ல் ஒரு நபரின் சராசரி மாதாந்தர மொபைல் டேட்டா பயன்பாடு 31 GB ஆக அதிகரித்துள்ளது. இது 2024-ல் 27.5 GB ஆக இருந்தது. நோக்கியாவின் Mobile Broadband Index 2025 அறிக்கையின்படி, நாட்டின் ஒருமாத டேட்டா பயன்பாடு 27 exabyte-களை (1 exabyte = 100 கோடி GB) தாண்டியுள்ளது. AI பயன்பாடு, 4K வீடியோ, கேமிங் ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.


