News October 27, 2024

தீபாவளி: சென்னை, நெல்லை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

image

தீபாவளியை முன்னிட்டு ரயில்கள், அரசு பஸ்களில் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், சென்னை – நெல்லை இடையே சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் (வண்டி எண். 06047) இன்று (அக்.27) மாலை 4 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு, நாளை காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். அதேபோல, நாளை (அக்.28) சென்ட்ரலில் மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண். 06073) மறுநாள் காலை 7:15-க்கு நெல்லையை சென்றடையும்.

Similar News

News February 22, 2026

திமுகவுக்கு ஓபிஎஸ் வந்தால் மகிழ்ச்சி: தங்க தமிழ்ச்செல்வன்

image

திமுகவுக்கு OPS வந்தால் மகிழ்ச்சி தான் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இருவரும் அதிமுகவில் இருந்தபோது எதிரெதிர் துருவங்களாக இருந்தனர். பின்னர், தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்து OPS-க்கு தேனியில் நெருக்கடி கொடுத்தார். இதனால் OPS திமுகவில் இணைந்தால், மீண்டும் மோதல் ஏற்படலாம் என கூறப்பட்ட நிலையில், இவ்வாறு பேசியுள்ளார். இது திமுக தலைமையின் அறிவுறுத்தலாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

News February 22, 2026

FLASH: தங்கம் விலை மேலும் குறைகிறது

image

IT ஆபிஸ் முதல் டீ கடைகள் வரை தங்கம் விலை பற்றிய பேச்சுகள் அதிகம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் நம்மில் பலருக்கும் அதில் முதலீடு செய்வதில் தயக்கம் இருக்கிறது. இந்நிலையில், உலக நாடுகள் மீதான வரி விதிப்பு பிரச்னையில் டிரம்பிற்கு பின்னடைவு, போர் சூழல்கள் தணிந்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை மேலும் குறையும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

News February 22, 2026

தந்தை VS மகன்.. KAS-ஐ வீழ்த்த அதிமுக திட்டம்!

image

அவினாசியில் அதிமுகவுக்கு ஆட்டம் காட்டவே ப.தனபாலின் <<19202348>>மகன் லோகேஷை<<>> செங்கோட்டையன் தவெகவுக்கு இழுத்துள்ளார். வரும் தேர்தலில் அவரை களமிறக்கவும் தலைமைக்கு சிபாரிசு செய்துள்ளாராம். ஆனால், அவரது வியூகத்தை முறியடிக்க அதிமுக தலைமை மீண்டும் தனபாலுக்கு சீட்டு கொடுக்க ஆலோசித்து வருகிறதாம். EX சபாநாயகர் தனபால், 1977, 1980, 1984, 2001, 2011, 2016, 2021 என 7 தேர்தல்களில்(ராசிபுரம், சங்ககிரி, அவினாசி) வென்றவர்.

error: Content is protected !!