News October 18, 2025

தீபாவளி.. மதுப்பிரியர்களுக்கு HAPPY NEWS

image

தீபாவளியையொட்டி மது தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க வேண்டும் என டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகம் விற்பனையாகும் மது வகைகளின் இருப்பை கணிசமாக உயர்த்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வழக்கத்தைவிட மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 13, 2026

கனிமொழியை முற்றுகையிட்ட மக்கள்.. பரபரப்பு

image

தூத்துக்குடியில் +2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் வேண்டும் என்று கிராம மக்கள் 2-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவியின் குடும்பத்தினரை அமைச்சர் கீதா ஜீவன் உடன் இணைந்து MP கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இவ்வளவு தாமதமாக ஏன் வந்தீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

News March 13, 2026

CEC-யை பதவி நீக்க தீர்மானம்… 193 MP-கள் கையெழுத்து!

image

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தில் 193 எதிர்க்கட்சி MP-கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனை, விரைவில் லோக்சபா (அ) ராஜ்யசபாவில் சமர்ப்பிக்க உள்ளனர். தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்ய கோருவது நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். தேர்தல் முறைகேடுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது பாகுபாடு காட்டுவதாக அவர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

News March 13, 2026

வீட்டு சிலிண்டர் கிடைக்காது.. BIG SHOCKING

image

போர் பதற்றத்துக்கிடையே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இன்னும் 2 வாரங்களுக்கு இதே நிலை நீடித்தால் வீட்டு உபயோக சிலிண்டர் கூட கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாட்டால் சாலையோர கடைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!