News September 27, 2025
ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி பரிசு.. புதுவை அரசு அறிவித்தது

புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை 2 கிலோ, சூரியகாந்தி எண்ணெய் 2 லிட்டர், கடலை பருப்பு 1 கிலோ, ரவை, மைதா தலா 500 கிராம் வழங்கப்படும் என அம்மாநில CM ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த 5 பொருள்களும் வரும் 10-ம் தேதிக்குள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளன. தமிழகத்திலும் தீபாவளி பரிசை அரசு அறிவிக்குமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
ரகுவரன்-தனுஷ் இடையே அப்பா-மகன் உறவு: ரோகிணி

‘காதல் கொண்டேன்’ படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து, இந்த பையன்கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு என ரகுவரன் கூறியதாக அவரது மனைவி ரோகிணி தெரிவித்துள்ளார். ‘யாரடி நீ மோகினி’ படத்தில் இணைந்து நடித்தபோது, ‘தனுஷ் என் பையன் மாதிரி’ என அடிக்கடி கூறியதாகவும், ‘3’ பட ஷூட்டிங்கில் இதை தனுஷிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர்களுக்கு இடையேயான பிணைப்பு அப்பா-மகன் உறவு போல இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News January 2, 2026
சற்றுமுன்: குடிநீரால் 14 பேர் பலியான துயரம்

இந்தூரில் <<18732273>>கழிவுநீர் கலந்த குடிநீரை<<>> குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஆனால், அரசு தரப்பு 7 பேர் மட்டுமே பலியானதாக கூறியுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, இறப்பு எண்ணிக்கை மாறுபாடு குறித்து விசாரித்து அனைவரது குடும்பத்திற்கும் நிதியுதவி அளிப்போம் என்றார். MP-ல் உள்ள இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.
News January 2, 2026
RO-KO விளையாட அதிக ODI நடத்த வேண்டும்: பதான்

IND vs NZ இடையே 3 போட்டிகளைக் கொண்ட ODI தொடர், வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், 5 போட்டிகளை கொண்ட தொடரை ஏன் நடத்தக் கூடாது என இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார். முத்தரப்பு, நான்கு தரப்பு ODI தொடர்களை நடத்தலாமே எனவும், RO-KO தொடர்ந்து விளையாட, அதிக ODI-களை BCCI நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கடைசியாக 2019-ல் 5 போட்டிகளைக் கொண்ட ODI தொடரில் விளையாடியது.


