News October 8, 2025
தீபாவளி பண்டிகை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

தீபாவளி நெருங்கி வருவதால், பலகார உற்பத்தி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பலகார விற்பனையாளர்கள் FSSAI உரிமம் பெற்றிருக்க வேண்டும் என TN அரசு தெரிவித்துள்ளது. முறையாக அனுமதியின்றி இனிப்பு, பலகாரம் விற்பனை செய்தால் ₹10 லட்சம் அபராதம், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். தரமான பொருள்களையே பலகார தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும். மக்கள் TNFSD Consumer App (அ) 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
Similar News
News October 8, 2025
BREAKING: கரூர் செல்கிறார் விஜய்

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க பாதுகாப்பு கேட்டு விஜய் மனு அளித்திருந்த நிலையில், கரூர் மாவட்ட SP-யை அணுக DGP அலுவலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இது ஒருவகையில் அவருக்கு கிடைத்த கிரீன் சிக்னல் என தவெகவினர் கூறுகின்றனர். இதனால், SP-யிடம் நேரம், இடம் குறித்த தகவலை கொடுத்து அனுமதி பெற்று ஓரிரு நாள்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
News October 8, 2025
திரை நாயகரை வழிபடுகிறோம்: ரிஷப் ஷெட்டி

நாம் திரை நடிகரை வழிபடும் மனநிலையில் உள்ளோம் என்று கரூர் துயரம் குறித்த கேள்விக்கு ரிஷப் ஷெட்டி பதிலளித்துள்ளார். இது வேண்டுமென்ற செய்யப்பட்டது அல்ல என்ற அவர், பலர் செய்த கூட்டு தவறாக இருக்கலாம் என கூறியுள்ளார். சில சமயங்களில் போலீஸால் கூட கும்பலை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என தெரிவித்தார். முன்னதாக, கரூர் சம்பவத்தால், சென்னையில் நடைபெறவிருந்த காந்தாரா பட விழா ரத்து செய்யப்பட்டிருந்தது.
News October 8, 2025
ஹீரோவாகும் உதயநிதியின் மகன் இன்பநிதி

DCM உதயநிதியின் மகன் இன்பநிதி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்பநிதி தற்போது நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். அதன் வீடியோக்கள் SM-ல் வெளியாகி வைரலானது. அண்மையில் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் ஹீரோவாக களமிறங்க உள்ளதாகவும் அந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.