News October 20, 2025

தீபாவளி.. பூஜை செய்ய நல்ல நேரம் எது தெரியுமா?

image

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீப ஒளி திருநாளில் பூஜை செய்ய உகந்த நேரம் எது என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. பஞ்சாங்கத்தின் படி, காலை 4 மணி முதல் 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து நீராடி விட வேண்டும். அதே போல, காலை 9:10 மணி முதல் 10:20 மணிக்குள் பூஜை செய்வது வீட்டிற்கு நற்பலன்களை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

Similar News

News October 20, 2025

Mass-ஆக தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி!

image

எப்படா வருவாரு என காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். ஆண்டுதோறும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன்பு, ரசிகர்கள் திரண்டு தீபாவளி வாழ்த்து பெற்று செல்வார்கள். இந்த ஆண்டும் காலை முதலே அவரது வீட்டு வாசலில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. வெயிட்டிங்கில் இருந்த ரசிகர்கள் முன் Mass-ஆக வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறினார்.

News October 20, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

image

தீபாவளி நாளான இன்று(அக்.20) தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,920-க்கும், சவரன் ₹95,360-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹190-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,90,000-க்கும் விற்பனையாகிறது.

News October 20, 2025

ஆஸ்துமா பிரச்னையா? தீபாவளிக்கான சில டிப்ஸ்

image

தீபாவளியன்று காற்றுமாசு பல மடங்கு அதிகரிக்கும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க: *வெளியில் செல்லும் போது மாஸ்க் அவசியம் *இன்ஹேலரை அருகில் வைத்துக் கொள்ளவும் *முடிந்தளவு பட்டாசு வெடிப்பதை குறைப்பது நல்லது. *பாதிப்புள்ள குழந்தைகள் பெரிய வெடிகளை தவிர்த்து, பெற்றோரின் மேற்பார்வையில் சின்ன வெடிகளை வெடித்து மகிழலாம் *இந்த சூழ்நிலையில் வெந்நீர் பருகுவது நல்லது.

error: Content is protected !!