News October 20, 2025
தீபாவளி பட்டாசு வெடிப்போர் இதை பாருங்க

*பட்டாசுகளை வாயில் வைத்தோ (அ) கையில் வைத்தோ வெடிக்கக்கூடாது. *மின்கம்பங்கள் அருகே வெடிக்க வேண்டாம். *வாகனத்திற்கு மேல் (அ) உள்புறம் வைத்து வெடிப்பது ஆபத்து. *பட்டாசு வெடிக்கும்போது அருகே சானிடைசர் வைத்திருக்க வேண்டாம். *பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டால், எண்ணெய் தடவாதீர்கள்; டாக்டரிடம் செல்லுங்கள். *தீப்பெட்டிக்கு பதிலாக அகர்பத்தி, மெழுகுவர்த்திகளை பயன்படுத்தி பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள்.
Similar News
News October 20, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

தீபாவளி நாளான இன்று(அக்.20) தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,920-க்கும், சவரன் ₹95,360-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹190-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,90,000-க்கும் விற்பனையாகிறது.
News October 20, 2025
ஆஸ்துமா பிரச்னையா? தீபாவளிக்கான சில டிப்ஸ்

தீபாவளியன்று காற்றுமாசு பல மடங்கு அதிகரிக்கும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க: *வெளியில் செல்லும் போது மாஸ்க் அவசியம் *இன்ஹேலரை அருகில் வைத்துக் கொள்ளவும் *முடிந்தளவு பட்டாசு வெடிப்பதை குறைப்பது நல்லது. *பாதிப்புள்ள குழந்தைகள் பெரிய வெடிகளை தவிர்த்து, பெற்றோரின் மேற்பார்வையில் சின்ன வெடிகளை வெடித்து மகிழலாம் *இந்த சூழ்நிலையில் வெந்நீர் பருகுவது நல்லது.
News October 20, 2025
FLASH: இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் உயர்வு

தீபாவளி நாளில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 317 புள்ளிகள் உயர்ந்து 84,269 புள்ளிகளிலும், நிஃப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 25,824 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக Asian Paints, ITC, Bharti Airtel, M&M உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.