News June 26, 2024
பாஜகவுக்கு ஓட்டு போட்டதால் விவாகரத்து

ம.பி.,யில் பாஜகவுக்கு ஓட்டு போட்டதால், தன்னை தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தனது கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுப்போட்டதால், என் கணவர் தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாகவும் அப்பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
Similar News
News March 2, 2026
அதிகார பகிர்வில் உறுதியாக இருக்கிறோம்: திருமா

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை முதன்முதலில் முன்னெடுத்ததே விசிகதான் என திருமாவளவன் கூறியுள்ளார். இன்னும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாக கூறிய அவர், TN அரசியல் அதற்கு இன்னும் கனியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், தங்களை பொறுத்தவரை அதிகாரத்தில் பங்கு என்றால் தற்போது அதிக தொகுதிகளை கேட்பதுதான் எனவும், தொகுதி பங்கீடு வலிமைக்கு ஏற்ப அமையவேண்டும் என திமுகவிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.
News March 2, 2026
மாதவிடாய் வலியை போக்க சூப்பர் டிப்ஸ்!

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியையும், மன உளைச்சலையும் போக்க சில பழங்களை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழை, பப்பாளி, அன்னாசி, தர்பூசணி, ஆரஞ்சு ஆகிய பழங்கள்தான் அவை. வாழைப்பழத்தின் மெக்னீசியம், மாதவிடாய் வலியின் தீவிரத்தை குறைக்கிறது. பப்பாளியின் விட்டமின் A, ஹார்மோன் சமநிலையை காக்கிறது. ஆப்பிளின் நார்ச்சத்தும், இரும்பு சத்தும் சோர்வு, மனநிலை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.
News March 2, 2026
37 மணி நேரம் பயணித்து தாக்கிய US விமானங்கள்!

US-ன் ‘B-2 Spirit Stealth Bomber’ விமானங்கள், ஈரானின் பூமிக்கடியில் இருக்கும் ஏவுகணை மையங்களை குறிவைத்து தாக்கி அழித்திருப்பதாக US அறிவித்துள்ளது. ஈரான் அருகிலுள்ள தங்கள் விமான தளங்களை பயன்படுத்த பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அனுமதி வழங்கவில்லை. இதனால், மிசோரியில் இருந்து புறப்பட்ட இந்த விமானங்கள், நடுவானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொண்டு, சுமார் 37 மணி நேரம் பறந்து இலக்கை தாக்கியதாக கூறப்படுகிறது.


