News December 20, 2024

12 முறை விவாகரத்து… 12 முறை திருமணம்… இது எப்படி!

image

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில், கடந்த 43 ஆண்டுகளில் 12 முறை விவாகரத்து செய்து மீண்டும் இணைந்து வாழ்ந்துவரும் தம்பதியினர் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, அந்நாட்டு அரசு வழங்கும் ₹24 லட்சம் உதவித்தொகை கொடுக்கிறது. அதை வாங்கவே விவாகரத்து முறையை சாதகமாக பயன்படுத்தி, இத்தம்பதி 12 முறை மறுத்திருமணம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இப்படி ஒரு திட்டம் இருந்தால்?

Similar News

News July 5, 2025

பொன்முடிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் எச்சரிக்கை

image

பொன்முடிக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால், சிபிஐ-க்கு மாற்றப்படும் என்று ஐகோர்ட் எச்சரித்துள்ளது. பெண்கள் & சைவ – வைணவ சமயங்கள் குறித்து பொன்முடி சர்ச்சையாக பேசியது தொடர்பாக தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால், அவற்றின் மீதான புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட், விசாரணையை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

News July 5, 2025

த்ரிஷா, நயன்தாரா மீது பாய்ந்த நடிகை ஸ்ரீரெட்டி

image

‘Me too’ புகார் கொடுத்தபோது நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் வாயை மூடிக்கொண்டு இருந்ததாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். தற்போது போதைப்பொருள் விவகாரத்திலும் மவுனம் காப்பதாக அவர்களை சீண்டியுள்ளார். சினிமாவுக்கு வரும் புது நடிகைகள் பெரிய ஆட்களுடன் சண்டை போட வேண்டாம் எனவும் பிரச்னைகளை வெளியே சொல்லாமல் பிடிக்காவிட்டால் அங்கிருந்து நகர்ந்து விடுங்கள் என புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

News July 5, 2025

CSK-க்கு இந்த 3 வீரர்கள் வேண்டும்: தோனி கோரிக்கை

image

IPL 2025, 5 முறை கோப்பை வென்ற CSK அணிக்கு பெரும் பின்னடவைக் கொடுத்தது. இதனால் 19-வது சீசனில் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அணி உள்ளது. இந்நிலையில், சஞ்சு சாம்சன் (RR), GT-யில் இருந்து ராகுல் தெவாட்டியா & வாஷிங்டன் சுந்தரை வாங்க வேண்டும் என சென்னை அணி நிர்வாகத்திற்கு தோனி பரிந்துரைத்துள்ளாராம். காயம் காரணமாக ருதுராஜ் விலக, தோனி கேப்டன்சி வகித்த போதிலும், அணி மோசமான தோல்விகளைச் சந்தித்தது.

error: Content is protected !!