News May 7, 2025
விவாகரத்து… புதுக்காதல்… மேரி கோம் விளக்கம்

விவாகரத்து, புதிய காதல் என மேரிகோம் பற்றி அடுத்தடுத்து செய்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது வழக்கறிஞர் மூலம் தெளிவான அறிக்கையை மேரி கோம் வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2023-ம் ஆண்டே கணவர் கரங் ஆன்லிரை அவர் விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. மேலும் ஹிதிஷ் சவுதி என்பவரை மேரிகோம் காதலித்து வருவதாக வெளியான செய்தியும் மறுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 9, 2026
ஆஸ்கர் ரேஸில் இணைந்த தமிழ் படம்!

ஆஸ்கர் ‘பொது நுழைவு பட்டியலில்’ டூரிஸ்ட் பேமிலி, காந்தாரா: சாப்டர் 1 உள்ளிட்ட 5 இந்திய படங்கள் தகுதி பெற்றுள்ளன. பொது நுழைவு என்பது தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனுப்பப்படுவது. இது பரிந்துரை அல்ல என்றாலும், முக்கிய பிரிவுகளில் போட்டியிட கிடைத்த முதல் அங்கீகாரம்! RRR-ம் பொதுப்பட்டியலில் இருந்து தேர்வாகியே விருதை வென்றது. ஜன.22-ல் இறுதிப்பட்டியல் வெளியாகும். இந்திய படங்கள் எதுவென அறிய SWIPE!
News January 9, 2026
அதிமுக விவகாரத்தில் இபிஎஸ்-க்கு ஆதரவாக SC உத்தரவு

EPS-க்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 2022-ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளராக EPS தேர்வானதற்கு எதிராக உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கெனவே, தள்ளுபடியான இவ்வழக்கில் மனுதாரர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், மனுதாரர் அதிமுகவை சேர்ந்தவர் அல்ல என்பதால் அவரது வாதங்களை ஏற்க கோர்ட் மறுத்துவிட்டது.
News January 9, 2026
பொங்கல் பண்டிகை.. ஒரு கிலோ ₹12,000

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மல்லிப்பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மதுரை உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லி ₹12,000-க்கு இன்று விற்பனையாகிறது. கடும் பனி, வரத்து குறைவே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 1 கிராம் தங்கத்தின் விலை ₹12,000-க்கு விற்கப்படும் நிலையில், அதனை மல்லிப்பூவும் எட்டியுள்ளது. இந்த விலையேற்றத்தால் பூ விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


