News December 23, 2025

Divorce ஆகாம No ‘Live-in’

image

திருமணமான ஒருவர் சட்டப்படி விவாகரத்து பெறாமல் இன்னொருவருடன் Live-in உறவில் இருப்பதை ஏற்க முடியாது என அலகாபாத் HC தெரிவித்துள்ளது. ஜோடி ஒன்று பாதுகாப்பு கோரி தொடர்ந்த வழக்கின் விசாரணையில், தனிநபர் சுதந்திரம் மற்றவர்களின் உரிமையை பறிப்பதாக இருக்கக்கூடாது என HC தெரிவித்துள்ளது. விவாகரத்து பெறும் வரை, கணவன் அல்லது மனைவிக்கு தன் துணையோடு வாழும் உரிமை உண்டு எனவும் HC குறிப்பிட்டுள்ளது.

Similar News

News December 23, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு… வந்தாச்சு HAPPY NEWS

image

புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதுகுறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், துறைசார்ந்த அமைச்சர்களான சக்கரபாணி, பெரியகருப்பன் மற்றும் அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு, பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் பொருள்கள் உள்ளிட்டவை இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE IT.

News December 23, 2025

இலங்கைக்கு, இந்தியா ₹4,000 கோடி நிதியுதவி

image

இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் அநுர குமார திசநாயகே, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசினார். அப்போது, டிட்வா புயல் சேதங்கள் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கர், சீரமைப்பு பணிகளுக்காக இலங்கைக்கு, இந்தியா சார்பில், சுமார் ₹4,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்தியா துணைநிற்கும் என்றும் கூறினார்.

News December 23, 2025

வெள்ளியில் முதலீடு செய்வது சரியா?

image

நடப்பாண்டின் துவக்கத்தில் ₹90,000 ஆக இருந்த ஒரு கிலோ வெள்ளி, தற்போது ₹2.14 லட்சமாக ஏற்றம் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் கவனத்தை பெற்று வருகிறது. எனினும் வெள்ளி முதலீட்டில் லாபம் சீராக கிடைப்பதில்லை. எனவே தங்கம், வெள்ளி ஆகிய இரண்டிலும் கலந்து முதலீடு செய்தால், வரும் காலத்தில் வெள்ளி விலையில் அதீத மாற்றம் ஏற்பட்டால் தங்கம் அதனை சமன்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.

error: Content is protected !!