News February 23, 2025
மொழியை வைத்து பிரிவினை: சீமான்

மொழியை வைத்து மத்திய அரசு மக்களை பிரிக்கப் பார்ப்பதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தி மொழி திணிப்பே மும்மொழிக் கொள்கையின் நோக்கம் எனவும், எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். விளம்பர பலகைகளை கூட ஆங்கிலத்தில் வைத்து தாய் மொழியை அழித்துவிட்டதாகவும், அதையெல்லாம் மீட்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 23, 2025
மாணவனை அடித்த இந்தி ஆசிரியை சஸ்பெண்ட்

சென்னையில் இந்தி கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் பவன் பள்ளியில் படித்து வரும் 3 ஆம் வகுப்பு மாணவன் இந்தி கவிதையை சரியாக சொல்லாததால், அவரை இந்தி ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது. மேலும், பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன் என மிரட்டியதால், பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதனால், ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தினாலே இப்ப பிரச்னை தான்!
News February 23, 2025
எந்த வழியில் வந்தாலும் ஏற்க மாட்டோம்: CM ஸ்டாலின்

மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என CM ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என கேட்டுக் கொண்டார். மும்மொழி கொள்கை விவகாரத்தில் ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
News February 23, 2025
அது எப்படி இந்திய தேசிய கீதம் வரும்? பாக். கிரிக்கெட் போர்டு

ENGvsAUS போட்டியின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டுள்ளது. அந்த அணி ICCக்கு எழுதிய கடிதத்தில், ‘இதனை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. அது எப்படி இந்தியா பாகிஸ்தானில் விளையாடாத போதும், Playlist இந்தியாவின் தேசிய கீதம் இடம்பெற்றது என கேள்வி எழுப்பியுள்ளது.