News July 24, 2024
அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்: டிடிவி

அதிமுகவில் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், திமுகவை வீழ்த்துவதற்காக விருப்பு வெறுப்புகளை மறந்து அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். துரோகிகளை நீக்கிவிட்டு, அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 3, 2026
கலகலத்துப் போன ராமதாஸ்.. கட்சியில் இருந்து நீக்கினார்

TN-ஐ தொடர்ந்து புதுச்சேரி தேர்தலிலும் அன்புமணி – ராமதாஸ் இடையிலான மோதல் எதிரொலிக்கிறது. சசிகலாவுடன் கூட்டணி வைத்ததால், அதிருப்தி அடைந்த ராமதாஸ் ஆதரவாளர்கள் வேறு கட்சிகளுக்கு மாறி வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி மாநில பாமக அமைப்பாளர் கணபதி உள்ளிட்ட 5 முக்கிய நிர்வாகிகள் அன்புமணியுடன் மீண்டும் இணைந்தனர். இதனால், கலகலத்துப் போன ராமதாஸ் 5 பேரையும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
News April 3, 2026
த்ரிஷா போனில் விஜய்யின்.. VIRAL

விவாகரத்து வழக்கிற்கு இடையே விஜய் – த்ரிஷா தொடர்பான பழைய தகவல்கள் வைரலாகின்றன. அந்தவகையில், த்ரிஷா அளித்த பழைய பேட்டி ஒன்று டிரெண்டாகிறது. அதில், விஜய்யின் பெயரை தனது போனில் ‘V’ என்று save செய்து வைத்துள்ளதாகவும், கில்லி பட சமயத்தில் விஜய்யை ‘சீட்டா’ என்று அனைவரும் செல்லமாக அழைத்ததாக த்ரிஷா கூறியுள்ளார். ஏனெனில், அவர் சீட்டா ஜாக்கெட் அணிந்திருந்தால் அப்படி கூப்பிட்டார்களாம்.
News April 3, 2026
ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கும் அதிசயம் இம்முறை நடக்குமா?

ஒருசில தொகுதிகளுக்கு தனி வரலாறே இருக்கிறது. அதன்படி, சோழவந்தான், ஸ்ரீபெரும்புதூர், வேடசந்தூர், ராமநாதபுரம் தொகுதிகளில் வெற்றிபெறும் வேட்பாளர்களின் கட்சி அல்லது கூட்டணி கட்சியே ஆட்சியை பிடித்துள்ளனவாம். வேடசந்தூர், ஸ்ரீபெரும்புதூரில் 1957 முதலும், சோழவந்தான், ராமநாதபுரத்தில் 1977 முதலும் இதே போக்கு பிரதிபலிக்கின்றன. இதனால், இத்தொகுதிகள் மீது தனிக் கவனம் செலுத்தப்படுகிறதாம். <<-se>>#TNElection2026<<>>


