News August 4, 2024
இரவு மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்

தமிழகத்தில் இரவு 1 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 16, 2026
பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை

கரூர் மாவட்டத்தில் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 150 கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.3க்கு பதிலாக, மார்ச், ஏப்ரல் மாதங்களில் லிட்டருக்கு ரூ.4 ஊக்கதொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தினமும் 65,000 லிட்டர் பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் இந்த கூடுதல் சலுகையால் பயனடைவார்கள்.
News March 16, 2026
டான்ஸிங் ஏவுகணையை பயன்படுத்திய ஈரான்

ஈரான் இந்த போரில் முதல்முறையாக சக்திவாய்ந்த செஜ்ஜில் என்ற ஏவுகணையை இஸ்ரேல் மீது ஏவியுள்ளது. ஏவுகணைகளை தடுத்து அளிக்கும் அயன் டோமை தாண்டி இலக்குகளை தாக்கு திறன் கொண்ட இதற்கு, டான்ஸிங் ஏவுகணை என்ற பெயரும் உள்ளது. 2000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கு திறன் கொண்ட டான்ஸிங் ஏவுகணை, ஈரானின் முக்கியமான துருப்பு சீட்டாகவும் பார்க்கப்படுகிறது.
News March 16, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 634
▶குறள்:
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
▶பொருள்: ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.


