News March 16, 2024
துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவர்களிடமும் ஒப்படைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News September 19, 2025
உடுமலையில் வேலை தேடுவோர் கவனத்திற்கு!

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது எனவே உடுமலை பகுதியில் வேலை தேடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 19, 2025
திருப்பூர் தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு சேவை

இந்திய தபால்துறை சார்பில் பல்வேறு சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட காந்திநகர் தபால் அலுவலகத்தில் ரயில்வே பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின் முன்பதிவு மற்றும் தட்கல் முன் பதிவுகளை செய்து கொள்ள சேவை தொடங்கப்பட்டிருப்பதாக திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
திருப்பூர்: பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது

திருப்பூர், திருமுருகன்பூண்டி அருகே பெண் ஒருவர் வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே காம்பவுண்டில் வசிக்கும் சுரேஷ்குமார் என்பவர், பெண் குளிப்பதை தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இது தொடர்பாக திருமுருகன்பூண்டி போலீசில், பெண் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.