News March 18, 2024
காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று முதல் காங்கிரஸ் கட்சி விநியோகிக்க உள்ளது. ரூ.500 கட்டணமாக செலுத்தி மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த மனுக்களை மார்ச் 20, மதியம் ஒரு மணிக்குள் கொடுக்க வேண்டும். பொதுத் தொகுதிக்கு ரூ.30 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.15,000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.5,000 கட்சி நன்கொடையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
தற்குறி அல்ல, TN அரசியலை மாற்றப்போகும் அறிகுறி: விஜய்

தவெக தொண்டர்களை, GenZ கிட்ஸ்களை தற்குறிகள் என திமுகவினர் அழைப்பதாக விஜய் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் தற்குறிகளா என கேள்வி எழுப்பிய அவர், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் காட்டும் மரியாதையும் நன்றியும் இதுதானா எனவும் கேட்டுள்ளார். மேலும், மக்கள் தற்குறி அல்ல தமிழகத்தின் ஆச்சரியக்குரி எனவும் அரசியலை மாற்றப்போகும் அறிகுறி எனவும் அவர் உணர்ச்சி பொங்க பேசினார்.
News November 23, 2025
‘ஆர்யன்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?

விஷ்ணு விஷால் நடிப்பில், பிரவீன் கே இயக்கியுள்ள ‘ஆர்யன்’ படம் அக்.31-ம் தேதி வெளியானது. படத்தின் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், கடைசி பாதி ஸ்லோவாக இருந்ததாகவும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 28-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.
News November 23, 2025
அடிக்காமலே அலறும் திமுக: விஜய் பாய்ச்சல்!

காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்த விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். பவள விழா பாப்பா, நீ பாசாங்கு காட்டாதே பாப்பா என பாடி கலாய்த்த அவர், பாப்பா என சாஃப்டாக தான் விமர்சனம் செய்ததாகவும் விளக்கமளித்தார். அத்துடன், இன்னும் விமர்சிக்க ஆரம்பிக்கவே இல்லை, அடிக்க ஆரம்பிக்கவே இல்லை எனவும் அதற்குள் அலறுனா எப்படி என்றும் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.


