News March 27, 2024
ஏப்ரல் 1 முதல் பூத் சிலிப் விநியோகம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்.13ஆம் தேதிக்குள் விநியோகிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News February 17, 2026
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க பட்ஜெட்

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்தார். அதன்படி தமிழகத்தில் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும் என்றும், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
News February 17, 2026
திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை: திருமா

‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதில் விசிக உறுதியாக இருப்பதாக திருமா தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் வலதுசாரிகளின் கைகள் ஓங்கி விட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை எழுப்புவதன் மூலம் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு பலவீனத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, அதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை; அதேநேரம் கைவிடவும் இல்லை என்றார்.
News February 17, 2026
DMK அரசுக்கு எதிராக பிப்.21-ல் BJP போராட்டம்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மிகவும் அதிகரித்துள்ளதாக நயினார் குற்றம் சாட்டியுள்ளார். இளைஞர்களை அழிக்கும் போதைப்பொருள் கும்பல்களை தடுக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்த அவர், போதைப்பொருள் மாஃபியாவுக்கு எதிரான அரசின் செயலின்மை, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கொள்கைகளை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் பிப்.21-ல் TN முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.


